×
المائدةவசனம் 106

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ شَهَـٰدَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ حِينَ ٱلْوَصِيَّةِ ٱثْنَانِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ أَوْ ءَاخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَأَصَـٰبَتْكُم مُّصِيبَةُ ٱلْمَوْتِ ۚ تَحْبِسُونَهُمَا مِنۢ بَعْدِ ٱلصَّلَوٰةِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرْتَبْتُمْ لَا نَشْتَرِى بِهِۦ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۙ وَلَا نَكْتُمُ شَهَـٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلْـَٔاثِمِينَ ﴿١٠٦﴾

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு மரணத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டால் உயில் எழுதும்போது முஸ்லிம்களில் நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தில் இருந்து மரணம் சமீபித்து இரு முஸ்லிமான சாட்சிகள் கிடைக்காவிட்டால் நிராகரிப்பாளர்களிலிருந்து இரு ஆண்களைச் சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்விருவரின் சாட்சியங்களில் சந்தேகம் ஏற்பட்டால் ஒரு தொழுகைக்குப் பின் அவர்களை அமரவைத்து “தங்களின் சாட்சியத்தை எதற்குப் பதிலாகவும் நாங்கள் விற்றுவிட மாட்டோம், எந்த உறவினருக்குச் சார்பாகவும் நடக்கமாட்டோம் தம்மிடமுள்ள அல்லாஹ்வுக்குரிய எந்தவொரு சாட்சியத்தையும் நாங்கள் மறைத்துவிட மாட்டோம், அவ்வாறு செயல்பட்டால் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட பாவிகள்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து வாக்குறுதி பெற்றுக் கொள்ளுங்கள்.