×
المائدةவசனம் 107

அல்-முக்தஸர்

فَإِنْ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسْتَحَقَّآ إِثْمًا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسْتَحَقَّ عَلَيْهِمُ ٱلْأَوْلَيَـٰنِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ لَشَهَـٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَـٰدَتِهِمَا وَمَا ٱعْتَدَيْنَآ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ ﴿١٠٧﴾

சத்தியம் பெற்ற பின்னர் அவர்கள் பொய் சாட்சி அல்லது பொய்ச் சத்தியம் செய்ததாக அல்லது தமது சாட்சியில் மோசடி இழைத்துள்ளதாகத் தெரியவந்தால் அவர்களுக்குப் பகரமாக இறந்தவரின் நெருங்கிய சொந்தங்களிலிருந்து வேறு இருவர் உண்மையான விடயத்துக்கு சாட்சி கூறட்டும் அல்லது சத்தியம் செய்யட்டும். அவர்கள், ‘அவ்விருவரும் தாம் உண்மையாளர்கள் நம்பிக்கையானவர்கள் எனக் கூறிய சாட்சியத்தை விடவும் அவர்கள் பொய்யர்கள் மோசடிசெய்பவர்கள் என்ற நமது சாட்சியே சிறந்தது நாம் பொய்ச் சத்தியம் செய்யவில்லை.நாம் பொய் சாட்சி கூறினால் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய அக்கிரமக்காரர்களாகிவிடுவோம்” என அவர்கள் சத்தியம் செய்யட்டும்.