அல்-முக்தஸர்
إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَـٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ ﴿١١٠﴾
அல்லாஹ் ஈஸாவிடம் பின்வருமாறு உரையாடிய சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக: “மர்யமின் மகன் ஈஸாவே, நான் உம்மை தந்தையின்றி படைத்தபோது உம்மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக. உமது தாய் மர்யமை அக்காலப் பெண்களை விட சிறப்பாக்கி அவர் மீது செய்த அருளையும் நினைவுகூர்வீராக! ஜிப்ரீலைக் கொண்டு நாம் உம்மை வலுப்படுத்தியபோது - நீர் கைக்குழந்தையாக இருந்த போது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து உரையாடினீர். மேலும் வாலிபப் பருவத்திலும் நான் உமக்கு வழங்கிய தூதை அவர்களுக்கு எடுத்துரைத்து உரையாடினீர். உமக்கு எழுதவும் மூஸாவுக்கு இறக்கிய தவ்ராத், உம்மீது இறக்கிய இன்ஜீல், மார்க்க சட்டங்களின் இரகசியங்களையும், பயன்களையும், நோக்கங்களையும் உமக்கு நான் கற்பித்ததும் நான் உமக்கு அளித்த அருட்கொடைகளே. மேலும் நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் மண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல் செய்து பின்னர் அதில் ஊதியதும் அது பறவையாயிற்று. நீர் பிறவிக் குருடனை குருட்டுத்தன்மையிலிருந்து குணப்படுத்துகிறீர். தொழுநோயாளியையும் குணப்படுத்துகிறீர். அதனால் அவர் ஆரோக்கியமான தோல் உடையவராக மாறிவிடுகிறார். உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர். இவையனைத்தும் என் அனுமதியால் நடந்தவையாகும். நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது ‘ஈஸா கொண்டு வந்தது தெளிவான சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று கூறி அவற்றை நிராகரித்து இஸ்ராயீலின் மக்கள் உம்மைக் கொல்ல நாடியபோது நாம் உம்மை இஸ்ரவேலர்களிடமிருந்து காப்பாற்றியதாகும்.