×
المائدةவசனம் 12

அல்-முக்தஸர்

وَلَقَدْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ ٱثْنَىْ عَشَرَ نَقِيبًا ۖ وَقَالَ ٱللَّهُ إِنِّى مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيْتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِى وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ ٱللَّهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴿١٢﴾

பின்வரும் விடயங்களுக்காக இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதியான வாக்குறுதி வாங்கினான். அவர்களுக்கு பன்னிரண்டு தலைவர்களை ஏற்படுத்தினான். ஒவ்வொருவரும் தம் பொறுப்பிலுள்ளவர்களைக் கண்காணிப்பவர்களாக இருந்தார்கள். அவன் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினான், “நீங்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து, உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத் வழங்கி, என் தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி உண்மைப்படுத்தி, அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களுக்கு உதவியும் செய்தால் நான் உங்களுடனே இருந்து உதவியும் ஆதரவும் வழங்குவேன். மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் நிறைவேற்றினால் நீங்கள் செய்த பாவங்களை நான் மன்னித்துவிடுவேன். மறுமைநாளில் சுவனங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வேன். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். உறுதிப்படுத்தப்பட்ட இந்த வாக்குறுதியை யாரேனும் மீறிவிட்டால் அவர் சத்தியப்பாதையை அறிந்துகொண்டே வேண்டுமென்றே அதிலிருந்து நெறிபிறழ்ந்து விட்டவராவார்.