×
المائدةவசனம் 13

அல்-முக்தஸர்

فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ لَعَنَّـٰهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَـٰسِيَةً ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ ۙ وَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱصْفَحْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ ﴿١٣﴾

அவர்கள் தம்மிடம் எடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியதனால் நாம் அவர்களை நம் அருளிலிருந்து தூரமாக்கி, கடின மனம் கொண்டவர்களாக ஆக்கிவிட்டோம். எனவே எந்த நன்மையான விஷயமும் அவர்களை அடையாது. அறிவுரையும் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வார்த்தைகளை மாற்றுவது மற்றும் தங்களின் மனஇச்சைக்கேற்ப தவறான பொருள் கற்பிப்பது ஆகியவற்றின் மூலம் வசனங்களை திரிக்கிறார்கள்; தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளில் சிலவற்றைச் செயல்படுத்துவதை அவர்கள் விட்டுவிட்டார்கள். தூதரே! அவர்கள் அல்லாஹ்வுக்கும் நம்பிக்கைகொண்ட அவனது அடியார்களுக்கும் மோசடி செய்வதை நீர் கண்டுகொண்டே இருக்கிறீர். ஆனாலும் அவர்களில் சிலர் தம்மிடம் எடுக்கப்பட்ட வாக்குறுதியைப் பூர்த்திசெய்தனர். நீர் அவர்களைப் புறக்கணித்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. இவ்வாறு செய்வதே நன்மையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்யக்கூடியவர்களை நேசிக்கிறான்.