×
المائدةவசனம் 15

அல்-முக்தஸர்

يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍ ۚ قَدْ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٌ وَكِتَـٰبٌ مُّبِينٌ ﴿١٥﴾

தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களே! நம்முடைய தூதர் முஹம்மது உங்களிடம் வந்துள்ளார்; நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலுள்ள பெரும்பாலான விஷயங்களை அவர் தெளிவுபடுத்துகிறார்; உங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லாத பல விஷயங்களை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்; அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் என்னும் வேதம் உங்களிடம் வந்துள்ளது. அது ஒளிரும் பிரகாசமாகவும் மக்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக விவகாரங்களுக்குத் தேவையானவற்றைத் தெளிவுபடுத்தும் வேதமாகவும் இருக்கின்றது.