×
المائدةவசனம் 16

அல்-முக்தஸர்

يَهْدِى بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَـٰمِ وَيُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِهِۦ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿١٦﴾

அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் தனக்கு விருப்பமான ஈமான் மற்றும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தனது வேதனையிலிருந்து ஈடேற்றம் பெறும் வழிகளைக் காட்டுகிறான். அது சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கக்கூடிய வழிகளாகும். நிராகரிப்பு, தீமை ஆகிய இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவனை நம்புதல், அவனுக்குக் கீழ்படிதல் ஆகிய ஒளியின் பக்கம் செல்வதற்கு அனுமதிக்கிறான். மேலும் இஸ்லாம் என்னும் நேரான பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான்.