×
المائدةவசனம் 17

அல்-முக்தஸர்

لَّقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ ۚ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ ٱللَّهِ شَيْـًٔا إِنْ أَرَادَ أَن يُهْلِكَ ٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ۗ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿١٧﴾

‘மர்யமின் மகன் ஈஸாதான் இறைவன்’ என்று கூறிய கிருஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “ஈஸாவையும் அவருடைய அன்னையையும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடிவிட்டால் யாரால் அதனைத் தடுக்க முடியும்? அவனைத் தடுப்பவர் யாருமில்லை என்பதே அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, மர்யமின் மகன் ஈஸாவும் அவரது தாய் மர்யமும் பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள்தாம் என்பதற்கான சான்றாகும். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடியதை படைக்கிறான், அவ்வாறு அவன் படைப்பதற்கு நாடியவற்றில் ஒருவரே ஈஸா (அலை) அவர்கள். அவர் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.