×
المائدةவசனம் 18

அல்-முக்தஸர்

وَقَالَتِ ٱلْيَهُودُ وَٱلنَّصَـٰرَىٰ نَحْنُ أَبْنَـٰٓؤُا۟ ٱللَّهِ وَأَحِبَّـٰٓؤُهُۥ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ ﴿١٨﴾

யூதர்களும் கிறிஸ்தவர்களும், ‘தாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், அவனுடைய நேசர்கள்’ என்று வாதிடுகின்றனர். தூதரே! நீர் கூறுவீராக: “அப்படியென்றால் நீங்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் ஏன் உங்களைத் தண்டிக்கிறான்? நீங்கள் கூறியவாறு நீங்கள் அவனுடைய நேசர்களாக இருந்தால் இவ்வுலகில் கொலை, உருமாற்றுதல் ஆகிய வேதனைகளாலும் மறுமையில் நெருப்பினாலும் தண்டித்திருக்கமாட்டான். ஏனெனில் அவன் தான் நேசிப்பவர்களை தண்டிக்கமாட்டான். மாறாக மற்ற மனிதர்களைப் போல நீங்களும் மனிதர்கள்தாம். நன்மை செய்தோருக்கு அவன் சுவனத்தை கூலியாக வழங்குகிறான். தீமை செய்தோருக்கு அவன் நரகத்தை தண்டனையாக வழங்குகிறான். தான் நாடியவர்களைத் தன் அருளால் மன்னிக்கிறான்; தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் பக்கமே திரும்ப வேண்டும்.