×
المائدةவசனம் 32

அல்-முக்தஸர்

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَـٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ ﴿٣٢﴾

காபீல் தன் சகோதரனைக் கொலை செய்ததனால் இஸ்ராயீலின் மக்களுக்கு அறிவித்தோம்: “பழிவாங்குதல் அல்லது நிராகரிப்போ வழிப்பறிக்கொள்ளை மூலமோ பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகிய காரணத்திற்காக அன்றி ஒரு மனிதனைக் கொலை செய்பவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஏனெனில் அவன் அப்பாவிக்கும் குற்றவாளிக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணவில்லை. யார் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதற்காக ஒரு உயிரைக் கொலைசெய்யாமல் தவிர்ந்துகொண்டாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போலாவார். ஏனெனில் அவரது செயலால் அனைவருக்கும் அமைதி கிடைக்கிறது. எமது தூதர்கள் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். இருந்தும் அவர்களில் பெரும்பாலானோர் பாவங்கள் புரிந்து தங்கள் தூதர்களுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.