×
المائدةவசனம் 33

அல்-முக்தஸர்

إِنَّمَا جَزَٰٓؤُا۟ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓا۟ أَوْ يُصَلَّبُوٓا۟ أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَـٰفٍ أَوْ يُنفَوْا۟ مِنَ ٱلْأَرْضِ ۚ ذَٰلِكَ لَهُمْ خِزْىٌ فِى ٱلدُّنْيَا ۖ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ﴿٣٣﴾

அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிட்டு, கொலை, சொத்தபகரிப்பு, வழிப்பறிக்கொள்ளை ஆகிய செயல்களின் மூலம் பூமியில் குழப்பத்தையும் வெறுப்பையும் விளைவிக்க விரைபவர்களின் கூலி இதுதான்: “அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு அல்லது அறையப்படாமல் கொல்லப்பட வேண்டும் அல்லது அவர்களின் வலது கையையும் இடது காலையும் வெட்ட வேண்டும் அத்தவறில் மீண்டும் ஈடுபட்டால் இடது கையுடன் வலது காலும் துண்டிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இந்த தண்டனை அவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்கும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.