×
المائدةவசனம் 42

அல்-முக்தஸர்

سَمَّـٰعُونَ لِلْكَذِبِ أَكَّـٰلُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَآءُوكَ فَٱحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْـًٔا ۖ وَإِنْ حَكَمْتَ فَٱحْكُم بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ ﴿٤٢﴾

இந்த யூதர்கள் பொய்யை அதிகமாக செவியேற்கக்கூடியவர்கள்; வட்டி போன்ற தடுக்கப்பட்ட செல்வங்களை அதிகமாக உண்ணக்கூடியவர்கள். தூதரே!அவர்கள் உம்மிடம் தீர்ப்புக்கேட்டு வந்தால் நீர் விரும்பினால் தீர்ப்பளிப்பீராக அல்லது அவர்களை தீர்ப்பளிக்காது விட்டுவிடுவீராக. இரண்டில் எதை வேண்டுமானாலும் நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீர் அவர்களிடையே தீர்ப்பளிக்காமல் விட்டுவிட்டால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கையும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அக்கிரமக்காரர்களாவும் எதிரிகளாகவும் இருந்தாலும் நீர் அவர்களிடையே தீர்ப்பளித்தால் நீதியுடன் தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவர்களை நேசிக்கிறான். தீர்ப்புக்கேட்பவர்கள் நீதிபதிக்கு எதிரிகளாக இருந்தாலும் சரியே.