×
المائدةவசனம் 43

அல்-முக்தஸர்

وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوْرَىٰةُ فِيهَا حُكْمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَـٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ ﴿٤٣﴾

இவர்களின் விவகாரம் மிகவும் ஆச்சரியமானது! ஏனெனில் தாங்கள் நம்பிக்கைகொண்டிருப்பதாக கூறும் அல்லாஹ்வின் தீர்ப்பை உள்ளடக்கிய தவ்ராத் அவர்களிடம் உள்ள நிலமையிலும், உம்மை நிராகரித்துவிட்டு நீர் வழங்கும் தீர்ப்பு அவர்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் உம்மிடம் தீர்ப்புக்கேட்கின்றனர். பின்னர் உமது தீர்ப்பு அவர்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக அமையவில்லையெனில் அதனைப் புறக்கணித்துவிடுகிறார்கள். தம் வேதத்தில் உள்ளதையும் நிராகரித்து, உமது தீர்ப்பையும் புறக்கணித்துவிடுகிறார்கள். இவர்களது இச்செயல் நம்பிக்கையாளர்களின் செயலல்ல. எனவே இவர்கள் உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களல்ல.