×
المائدةவசனம் 52

அல்-முக்தஸர்

فَتَرَى ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ يُسَـٰرِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٌ ۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأْتِىَ بِٱلْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِۦ فَيُصْبِحُوا۟ عَلَىٰ مَآ أَسَرُّوا۟ فِىٓ أَنفُسِهِمْ نَـٰدِمِينَ ﴿٥٢﴾

தூதரே! பலவீனமான நம்பிக்கையுடைய நயவஞ்சகர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நேசிப்பதற்கு முன்வருவதை நீர் காண்பீர். அவர்கள் கூறுகிறார்கள், “இவர்கள் நம்மை மிகைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் நமக்குத் தீங்கிழைக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.” அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெற்றியளிக்கக்கூடும் அல்லது யூதர்களின் அதிகாரத்தை இல்லாமலாக்கக்கூடிய ஏதேனும் ஒன்றை கொண்டுவரக்கூடும். அப்போது அவர்களை நேசிப்பதற்கு முந்திக்கொண்டு சென்றோர் தாம் கூறிவந்த பலமற்ற காரணங்கள் பிழைத்துவிட்டதனால் தம் உள்ளங்களில் தாம் மறைத்துவைத்திருந்த நயவஞ்சகத்திற்காக கைசேதப்படுவார்கள்.