அல்-முக்தஸர்
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فَأَصْبَحُوا۟ خَـٰسِرِينَ ﴿٥٣﴾
அப்போது நம்பிக்கையாளர்கள் இந்த நயவஞ்சகர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்களாகக் கூறுவார்கள், “நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொள்வதிலும் உதவிசெய்வதிலும் தோழமைகொள்வதிலும் உங்களுடன் இருக்கின்றோம்” என்று இவர்கள்தாம் உறுதியான சத்தியம் செய்து கூறினார்களா?” அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தங்களின் குறிக்கோள் தவறியதனாலும், அல்லாஹ் அவர்களுக்கு வேதனையைத் தயார்படுத்தி வைத்திருப்பதனாலும் அவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.