×
المائدةவசனம் 6

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًا فَٱطَّهَّرُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَـٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿٦﴾

நம்பிக்கை கொண்டவர்களே! சிறுதொடக்கு உள்ள நிலையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்ற எழுந்தால் உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை கைகளையும் கழுவி, தலைகளை தடவி இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவி வுழூ செய்துகொள்ளுங்கள். உங்கள் மீது குளிப்பு அவசியமாகிவிட்டால் குளித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்து நோய் அதிகமாகிவிடும் என்றோ அல்லது நிவாரணம் தாமதமடையும் என்றோ அஞ்சினால் அல்லது ஆரோக்கியமாக நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவது போன்றவற்றின் மூலம் சிறுதொடக்கு உள்ள நிலமையில் இருந்து அல்லது உங்கள் மனைவியருடன் உடலுறவு கொண்டு பெருந்தொடக்கு உடையவராக இருந்து சுத்தம் செய்வதற்காக தண்ணீரைத் தேடியும் கிடைக்காத பட்சத்தில், பூமியின் மேல் உங்கள் இருகைகளால் அடித்து உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். பாதிப்பு ஏற்பட்டாலும் தண்ணீரை கண்டிப்பாக பயன்படுத்தியே தீர வேண்டும் என்று அல்லாஹ் தன் சட்டங்களில் சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. தண்ணீர் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத சமயத்தில் அல்லாஹ் அதற்கான பதிலீட்டை அனுமதித்துள்ளான். இது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுக்காது நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகவும்தான்.