×
المائدةவசனம் 7

அல்-முக்தஸர்

وَٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمِيثَـٰقَهُ ٱلَّذِى وَاثَقَكُم بِهِۦٓ إِذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٧﴾

இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டி அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். “மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் நாங்கள் நீர் கூறும் விஷயத்தை செவியுறுவோம், உம் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம்” என்று நீங்கள் தூதரிடம் உடன்படிக்கை செய்து கூறிய சமயத்தில் அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.