×
المائدةவசனம் 8

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ ﴿٨﴾

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தியவர்களே! அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக அவன் உங்கள் மீது விதித்த கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், அநீதியின்றி நீதமாகவே சாட்சி கூறக்கூடியவர்களாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமூகத்தின் மீதுள்ள பகைமை அவர்கள் மீது நீதி தவற வைத்துவிட வேண்டாம். நண்பர்கள், எதிரிகள் என அனைவருடனும் நீதி கடைபிடிக்கப்படுவது அவசியமாகும். எனவே இரு சாராருடனும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீதி செலுத்துதல் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அநீதி இழைத்தல் இறைவனுக்கு எதிரான செயல்பாடாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.