அல்-முக்தஸர்
وَلَوْ كَانُوا۟ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِىِّ وَمَآ أُنزِلَ إِلَيْهِ مَا ٱتَّخَذُوهُمْ أَوْلِيَآءَ وَلَـٰكِنَّ كَثِيرًا مِّنْهُمْ فَـٰسِقُونَ ﴿٨١﴾
இந்த யூதர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டிருந்தால் நம்பிக்கையாளர்களை விடுத்து இணைவைப்பாளர்களை நேசிப்பவர்களாகவும் அவர்களின் பக்கம் சாய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த யூதர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது அவனையும் விசுவாசிகளையும் நேசித்தல் ஆகியவற்றை விட்டும் வெளியேறியவர்களே.