×
المائدةவசனம் 82

அல்-முக்தஸர்

لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلْيَهُودَ وَٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَـٰرَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ ﴿٨٢﴾

தூதரே! உம்மீதும் நீர் கொண்டுவந்ததன் மீதும் நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மற்ற மக்களைவிட யூதர்களும், சிலை வணங்கிகளும் ஏனைய இணைவைப்பாளர்களுமே கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர். காரணம், அந்த யூதர்களிடம் காணப்படும் கர்வமும் பொறாமையும் குரோதமுமேயாகும். உம்மீது நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகத் தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களை நீர் காண்பீர். நம்பிக்கையாளர்களுடன் அவர்கள் நெருக்கமாயிருப்பதற்குக் காரணம் அவர்களில் அறிஞர்களும் வணக்கசாலிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பணிவானவர்கள். கர்வம் கொள்வதில்லை. ஏனெனில் கர்வம்கொள்பவனின் உள்ளத்தை சத்தியம் சென்றடையாது.