×
الأنعامவசனம் 101

அல்-முக்தஸர்

بَدِيعُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُۥ صَـٰحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَىْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿١٠١﴾

அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதபோது பிள்ளை எங்கிருந்து வர முடியும்? அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.