×
الأنعامவசனம் 100

அல்-முக்தஸர்

وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ ٱلْجِنَّ وَخَلَقَهُمْ ۖ وَخَرَقُوا۟ لَهُۥ بَنِينَ وَبَنَـٰتٍۭ بِغَيْرِ عِلْمٍ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يَصِفُونَ ﴿١٠٠﴾

இணைவைப்பாளர்கள் ஜின்களால் பலனளிக்கவும் தீங்கிழைக்கவும் முடியும் என்று நம்பியதன் மூலம் அவர்களை வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கி விட்டார்கள். அந்த ஜின்களையும் அல்லாஹ்தான் படைத்தான். வேறு யாருமல்ல. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். யூதர்கள் உஸைர் அவர்களையும், கிறிஸ்தவர்கள் ஈஸாவையும் எடுத்துக்கொண்டது போன்று இந்த இணைவைப்பாளர்களும் அல்லாஹ்வுக்கு பிள்ளைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். மேலும் இந்த இணைவைப்பாளர்கள் மலக்குமார்களை அல்லாஹ்வுக்கு மகள்கள் எனவும் கூறுகின்றனர். இந்த அசத்தியவாதிகள் கூறும் பண்புகளிலிருந்து அல்லாஹ் பரிசுத்தமானவன்.