×
الأنعامவசனம் 99

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ ٱلنَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّـٰتٍ مِّنْ أَعْنَابٍ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَـٰبِهٍ ۗ ٱنظُرُوٓا۟ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَيَنْعِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكُمْ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٩٩﴾

அவன்தான் வானத்திலிருந்து மழை நீரை இறக்கினான். அதைக்கொண்டு எல்லா வகையான தாவரங்களையும் முளையச் செய்கின்றோம். அந்த தாவரங்களிலிருந்து பயிர்களையும் பசுமையான மரங்களையும் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அடுக்கடுக்காக இருக்கக்கூடிய நெற்கதிர் போன்ற விதைகளை வெளிப்படுத்துகின்றோம். பேரீச்சை மரத்தின் பாளைகளிலிருந்து எழுந்திருப்பவரும் அமர்ந்திருப்பவரும் பறிக்கும் வகையில் அருகில் தொங்கக்கூடிய குலைகளையும் வெளிப்படுத்துகின்றோம். திராட்சைத் தோட்டங்களையும், ஆலிவ், மாதுளை போன்றவற்றையும் வெளிப்படுத்துகின்றோம். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. பழங்களோ வேறுபட்டதாக இருகின்றன. மனிதர்களே! அவை ஆரம்பத்தில் வெளிப்படும் போதும் கனியும் போதும் அவற்றைப் பாருங்கள். இதில் அல்லாஹ்வை நம்பும் மக்களுக்கு அவனுடைய வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.அவர்களே இவ்ஆதாரங்களிலிருந்து பயனடைவார்கள்.