×
الأنعامவசனம் 108

அல்-முக்தஸர்

وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٠٨﴾

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அற்பமானவையாக, திட்டுவதற்கு உரியவையாக இருந்தாலும் அவற்றைத் திட்டாதீர்கள். இதனால் இணைவைப்பாளர்கள் வரம்புமீறி அறியாமையால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவர்களுக்கு அவர்களின் வழிகேடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்களின் செயல்களை நலவோ தீமையோ நாம் அலங்கரித்தோம். நாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டியதையே அவர்கள் செய்வார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடமே திரும்ப வேண்டும். இவ்வுலகில் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.