×
الأنعامவசனம் 109

அல்-முக்தஸர்

وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ لَئِن جَآءَتْهُمْ ءَايَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا ٱلْـَٔايَـٰتُ عِندَ ٱللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَآ إِذَا جَآءَتْ لَا يُؤْمِنُونَ ﴿١٠٩﴾

“முஹம்மது நாங்கள் கூறும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எங்களிடம் கொண்டு வந்தால் நாங்கள் அவரை நிச்சயம் உண்மைப்படுத்துவோம்” என்று இணைவைப்பாளர்கள் கடுமையான சத்தியம் செய்து கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “சான்றுகளை நான் இறக்குவதற்கு அவை என்னிடம் இல்லை. அவை அல்லாஹ்விடமே இருக்கின்றன. அவன் தான் நாடிய போது அவற்றை இறக்குகிறான். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் கூறுவது போன்று சான்றுகள் இறக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தங்களின் நிராகரிப்பிலும் பிடிவாத்திலுமே நிலைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விரும்பவில்லை.