×
الأنعامவசனம் 115

அல்-முக்தஸர்

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَـٰتِهِۦ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ﴿١١٥﴾

உம் இறைவனின் வாக்கான குர்ஆன் உண்மையிலும் நீதியிலும் முழுமையடைந்துவிட்டது. அவனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.