×
الأنعامவசனம் 116

அல்-முக்தஸர்

وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى ٱلْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ ﴿١١٦﴾

தூதரே! பூமியில் உள்ள பெரும்பான்மையினரை நீர் பின்பற்றினால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு உம்மை வழிகெடுத்து விடுவார்கள். சத்தியம் குறைவானர்களுடன்தான் இருக்கும் என்பதே அவன் அமைத்த நியதியாகும். மக்களில் பெரும்பாலோர் ஆதாரமற்ற யூகங்களையே பின்பற்றுகிறார்கள். எனவேதான் தங்களின் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் என்று எண்ணுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் பொய்யையே கூறுகிறார்கள்.