அல்-முக்தஸர்
وَلَا تَأْكُلُوا۟ مِمَّا لَمْ يُذْكَرِ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَإِنَّهُۥ لَفِسْقٌ ۗ وَإِنَّ ٱلشَّيَـٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ لِيُجَـٰدِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ ﴿١٢١﴾
முஸ்லிம்களே! அல்லாஹ் பெயர் கூறி அறுக்கப்படாததை உண்ணாதீர்கள். அவனல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டாலும் அல்லது யாரினுடைய பெயரும் கூறப்படாவிட்டாலும் சரியே. அதனை உண்பது அல்லாஹ்வுக்கு அடிபணியாது மாறுசெய்வதாகும். இறந்தவற்றை உண்ணும் விடயத்தில் உங்களிடம் தர்க்கம் புரியுமாறு, ஷைத்தான்கள் தங்களின் தோழர்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறார்கள். முஸ்லிம்களே! இறந்தவற்றை உண்ணுவதை அனுமதிப்பதற்காக அவர்கள் ஏற்படுத்தும் சந்தேகங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்களும் அவர்களும் ஷிர்க்கில் சமமாகி விடுவீர்கள்.