×
الأنعامவசனம் 122

அல்-முக்தஸர்

أَوَمَن كَانَ مَيْتًا فَأَحْيَيْنَـٰهُ وَجَعَلْنَا لَهُۥ نُورًا يَمْشِى بِهِۦ فِى ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِى ٱلظُّلُمَـٰتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَـٰفِرِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٢٢﴾

அல்லாஹ் நேர்வழிகாட்டுவதற்கு முன்னர் நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் ஆகிவற்றால் உயரற்றவர்களாக இருந்து, நம்பிக்கை, கல்வி, வழிப்படுதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியதன் மூலம் நாம் உயிர்த்தெழச் செய்தவர்களும், நிராகரிப்பு, அறியாமை, பாவங்கள் என்னும் இருள்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களும் சமமாக முடியுமா? அவர்கள் இருள் சூழ்ந்த பாதைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த இணைவைப்பாளர்களுக்கு இணைவைப்பும், செத்தவற்றை உண்ணுதலும், உங்களுடன் தவறான முறையில் தர்க்கம்புரிவதும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது போல நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்களும் பாவங்களும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைக் கூலியாக வழங்குவதற்கே அவ்வாறு அழகாக்கப்பட்டுள்ளன.