அல்-முக்தஸர்
وَكَذَٰلِكَ جَعَلْنَا فِى كُلِّ قَرْيَةٍ أَكَـٰبِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا۟ فِيهَا ۖ وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ ﴿١٢٣﴾
மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களின் தலைவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்ததைப் போல ஒவ்வொரு ஊரிலுள்ள தலைவர்களையும் பெரியவர்களையும் ஷைத்தானின் பாதையை நோக்கி அழைப்பதற்கும் தூதர்களையும் அவர்களைப் பின்போற்றுவோரையும் எதிர்ப்பதற்கும், தந்திரங்கள் செய்வோராகவும் சூழ்ச்சி செய்வோராகவும் நாம் ஆக்கினோம். உண்மையில் அவர்களின் சூழ்ச்சிகளும் திட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். ஆயினும் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றுவதனாலும் அறியாமையினாலும் அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடியாது.