×
الأنعامவசனம் 124

அல்-முக்தஸர்

وَإِذَا جَآءَتْهُمْ ءَايَةٌ قَالُوا۟ لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَآ أُوتِىَ رُسُلُ ٱللَّهِ ۘ ٱللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُۥ ۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٌ شَدِيدٌۢ بِمَا كَانُوا۟ يَمْكُرُونَ ﴿١٢٤﴾

நிராகரிப்பாளர்களின் தலைவர்களிடம் அல்லாஹ் தன் தூதருக்கு இறக்கிய வசனங்களில் ஏதேனும் ஒரு வசனம் வந்தால், “தூதர்களுக்கு அல்லாஹ் அளித்த தூதுத்துவத்தைப் போல் எங்களுக்கும் அளிக்காத வரை நாங்கள் இதனை உண்மைப்படுத்த மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தூதுத்துவத்திற்கும் அதன் சுமைகளைத் தாங்குவதற்கும் தகுதியானவர்களை அல்லாஹ் அறிவான். இந்த அக்கிரமக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் கர்வம் கொண்டதனால் இழிவுக்கும் சூழ்ச்சி செய்ததனால் கடுமையான வேதனைக்கும் ஆளாவார்கள்.