×
الأنعامவசனம் 18

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ ﴿١٨﴾

அவன் தனது அடியார்களை விட மிகைத்தவன். அனைவரையும் அடிபணிய வைப்பவன், அனைத்து வகையிலும் அவர்களை விட உயர்ந்தவன். அவனுக்கு இயலாதது எதுவுமில்லை. அவனை யாராலும் மிகைக்க முடியாது. அனைவரும் அவனுக்குக் கட்டுப்படுபவர்கள்தாம். தன் கண்ணியத்திற்கேற்ப தனது அடியார்களுக்க மேலால் இருக்கிறான். தன் படைப்பிலும் நிர்வாகத்திலும் தான் வழங்கிய சட்டங்களிலும் அவன் ஞானம்மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.