அல்-முக்தஸர்
قُلْ أَىُّ شَىْءٍ أَكْبَرُ شَهَـٰدَةً ۖ قُلِ ٱللَّهُ ۖ شَهِيدٌۢ بَيْنِى وَبَيْنَكُمْ ۚ وَأُوحِىَ إِلَىَّ هَـٰذَا ٱلْقُرْءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَ ۚ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخْرَىٰ ۚ قُل لَّآ أَشْهَدُ ۚ قُلْ إِنَّمَا هُوَ إِلَـٰهٌ وَٰحِدٌ وَإِنَّنِى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ ﴿١٩﴾
தூதரே! உம்மை நிராகரித்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு யாருடைய சாட்சி மிகப் பெரியதாக இருக்கும்?” நீர் கூறுவீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு அல்லாஹ்வின் சாட்சியமே பெரியதாக இருக்கும். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாளனாக இருக்கின்றான். நான் உங்களிடம் கொண்டுவந்ததையும் நீங்கள் அதற்கு என்ன பதிலளிப்பீர்கள் என்பதையும் அவன் அறிவான். நான் உங்களை அச்சமூட்டுவதற்காக, மனிதர்கள், ஜின்கள் அனைவரையும் அச்சமூட்டுவதற்காக அல்லாஹ் எனக்கு இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளான். இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்” தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் ஏற்றுக் கொண்டது அசத்தியம் என்பதனால் அதற்கு நான் சாட்சி கூறமாட்டேன். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அனைத்தையும் விட்டும் நான் விலகிவிட்டேன்.”