அல்-முக்தஸர்
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا۟ عَلَىٰ مَا كُذِّبُوا۟ وَأُوذُوا۟ حَتَّىٰٓ أَتَىٰهُمْ نَصْرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَـٰتِ ٱللَّهِ ۚ وَلَقَدْ جَآءَكَ مِن نَّبَإِى۟ ٱلْمُرْسَلِينَ ﴿٣٤﴾
அவர்கள் நீர் கொண்டுவந்ததை மட்டும்தான் நிராகரிக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். உமக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் சமூகங்கள் அவர்களைத் துன்புறுத்தியிருக்கின்றன. ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் உதவி வரும் வரை, பிரச்சாரத்திலும், அல்லாஹ்வின் பாதையில் போராடுவதன் மூலமும் பொறுமையாக இருந்து அவற்றை எதிர்கொண்டார்கள். அல்லாஹ் எழுதிவைத்த உதவியையும் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் யாராலும் மாற்ற முடியாது. தூதுரே! முந்தைய தூதர்களின் செய்திகளும் அவர்களது சமுதாயங்கள் மூலம் அவர்கள் அனுபவித்தவைகளும், அவர்களது எதிரிகளை அழித்து அவர்களுக்கு வழங்கிய வெற்றியைப் பற்றிய செய்திகளும் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.