அல்-முக்தஸர்
وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ ٱسْتَطَعْتَ أَن تَبْتَغِىَ نَفَقًا فِى ٱلْأَرْضِ أَوْ سُلَّمًا فِى ٱلسَّمَآءِ فَتَأْتِيَهُم بِـَٔايَةٍ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمْ عَلَى ٱلْهُدَىٰ ۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْجَـٰهِلِينَ ﴿٣٥﴾
தூதுரே! நீர் அவர்களுக்கு கொண்டுவந்த சத்தியத்தில் அவர்களின் நிராகரிப்பும் புறக்கணிப்பும் உமக்குப் பாரமாகத் தோன்றினால் உம்மால் முடிந்தால் பூமியில் ஒரு சுரங்கத்தையோ வானத்தில் ஒரு ஏணியையோ அமைத்து நாம் உமக்கு அளித்த ஆதாரங்கள், சான்றுகள் அல்லாமல் வேறு ஆதாரங்களையோ சான்றுகளையோ கொண்டு வரமுடியுமானால் கொண்டு வாரும். அவர்களுக்கு அல்லாஹ் நீர் கொண்டுவந்த நேர்வழியின் பக்கம் வழிகாட்ட நாடியிருந்தால் அவன் நேர்வழிகாட்டியிருப்பான். ஆயினும் அவன் ஒரு ஆழமான நோக்கத்திற்காக அவ்வாறு விரும்பவில்லை. எனவே அதனைப் புரியாத ஒருவராக நீர் ஆகிவிடாதீர். அதனை நீர் புரியாவிட்டால், அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையே என்ற கவலையால் உமது உயிரே போய்விடும்.