அல்-முக்தஸர்
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا صُمٌّ وَبُكْمٌ فِى ٱلظُّلُمَـٰتِ ۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿٣٩﴾
நம்முடைய வசனங்களை நிராகரித்தவர்கள் கேட்க முடியாத செவிடர்களை, பேசமுடியாத ஊமையர்களைப் போன்றவர்களாவர். அத்துடன் அவர்கள் பார்க்கமுடியாமல் இருள்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு நேர்வழி அடைய முடியும்? யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடிவிட்டானோ அவரை வழிகெடுத்தே தீருவான். யாருக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.