×
الأنعامவசனம் 40

அல்-முக்தஸர்

قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ أَوْ أَتَتْكُمُ ٱلسَّاعَةُ أَغَيْرَ ٱللَّهِ تَدْعُونَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿٤٠﴾

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களின் தெய்வங்கள் நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற்றவை என்று நீங்கள் கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் எனக்கு அறிவியுங்கள், அல்லாஹ்வின் வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு நிச்சயமாக வரும் என்று எச்சரிக்கப்பட்ட அந்நேரம் வந்துவிட்டால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குவதற்கு அல்லாஹ்வைத் தவிர உள்ளவர்களையா அழைப்பீர்கள்?.”