அல்-முக்தஸர்
وَحَآجَّهُۥ قَوْمُهُۥ ۚ قَالَ أَتُحَـٰٓجُّوٓنِّى فِى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنِ ۚ وَلَآ أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّى شَيْـًٔا ۗ وَسِعَ رَبِّى كُلَّ شَىْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ ﴿٨٠﴾
இணைவைக்கும் அவருடைய சமூகத்தினர் அல்லாஹ் ஒருவனே என்ற விஷயத்தில் அவரிடம் வாதம் செய்தார்கள். தங்கள் சிலைகளைக் காட்டி பயமுறுத்தினார்கள். அவர் கூறினார், “அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்ற விஷயத்திலா நீங்கள் என்னிடம் வாதம் புரிகிறீர்கள்? அதன் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டிவிட்டான். நான் உங்களின் சிலைகளைக் கண்டு அஞ்சமாட்டேன். ஏனெனில் அவை பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெறமாட்டாது. ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் நாடியது நிறைவேறியே தீரும். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்துள்ளதுடன் வானத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஒன்றும் அவனை விட்டு மறைவாக இல்லை. என் சமூகமே, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, அவனை நிராகரிக்கும் நீங்கள் அல்லாஹ் ஒருவன் மீது மட்டுமே நம்பிக்கைகொண்டு அறிவுரை பெற மாட்டீர்களா?”