×
الأنعامவசனம் 81

அல்-முக்தஸர்

وَكَيْفَ أَخَافُ مَآ أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ عَلَيْكُمْ سُلْطَـٰنًا ۚ فَأَىُّ ٱلْفَرِيقَيْنِ أَحَقُّ بِٱلْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨١﴾

அல்லாஹ் படைத்தவற்றையே எவ்வித ஆதாரமும் இன்றி அவனுக்கு இணையாக்கி வணங்குவதையிட்டு நீங்கள் அஞ்சாதபோது, அவனைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? ஏகத்துவவாதிகள், இணைவைப்பாளர்கள் ஆகிய இரு கூட்டத்தாரில் அச்சமற்று இருக்கத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவர்களையே பின்பற்றுங்கள். எவ்வித சந்தேகமுமின்றி இறைநம்பிக்கை மிக்க ஏகத்துவவாதிகளே அதற்கு மிகத் தகுதியானோர்.