அல்-முக்தஸர்
أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ أَهْلِهَآ أَن لَّوْ نَشَآءُ أَصَبْنَـٰهُم بِذُنُوبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ ﴿١٠٠﴾
தங்களின் பாவங்களின் காரணமாக அழிக்கப்பட்ட முந்தைய சமூகத்தினருக்குப் பிறகு பூமியில் வழித்தோன்றல்களாக வந்து அவர்களுக்கு நிகழ்ந்ததைக் கொண்டு படிப்பினை பெறாமல் அவர்கள் செய்தவற்றையே செய்யும் இவர்களுக்கு, அல்லாஹ் தன் வழிமுறைப்படி தான் நாடினால் அவர்களின் பாவங்களினால் அவர்களை அழித்தது போன்று இவர்களின் பாவங்களினால் இவர்களையும் அழித்துவிடுவோம் என்பது புரியவில்லையா?, அறிவுரையிலிருந்து பயனடையவோ ஞாபகமூட்டல் பலனிளக்கவோ முடியாதவாறு அவர்களின் உள்ளங்களின் மீது அவன் முத்திரையிட்டுவிடுவான்.