அல்-முக்தஸர்
تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَـٰفِرِينَ ﴿١٠١﴾
தூதரே! மேலே குறிப்பிடப்பட்ட நூஹ், ஹூத், ஸாலிஹ், லூத், ஸுஐப் ஆகியோரின் சமூகங்கள் வசித்த ஊர்களைக் குறித்தும் அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அழிவைக் குறித்தும் நாம் உமக்கு எடுத்துரைப்பது, படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாக இருப்பதற்காகவும்தான். இந்த ஊர்வாசிகளிடம் அவர்களின் தூதர்கள் தாம் உண்மையாளர்கள் என்பதற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவரை நிராகரிப்பார்கள் என அவன் முன்பே அறிந்து வைத்திருந்ததனால் தூதர்கள் வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. தங்களின் தூதர்களை நிராகரித்த இந்த ஊர்வாசிகளின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டது போன்றே முஹம்மதை நிராகரித்தவர்களின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுவான். எனவே அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.