அல்-முக்தஸர்
قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّ هَـٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ ﴿١٢٣﴾
அவர்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கை கொண்ட பிறகு பிர்அவ்ன் அவர்களை மிரட்டியவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? மூஸா கொண்டுவந்ததன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கை மக்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்று வேலைதான். இந்த நகர மக்களை வெளியேற்றுவதற்காக நீங்களும் மூஸாவும் போட்ட இரகசிய திட்டமே இது. சூனியக்காரர்களே! உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.