×
الأعرافவசனம் 126

அல்-முக்தஸர்

وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَـٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ ﴿١٢٦﴾

பிர்அவ்னே! அல்லாஹ்வின் சான்றுகள் மூஸாவின் மூலமாக எங்களிடம் வந்த போது நாங்கள் அவற்றின் மீது நம்பிக்கை கொண்ட எமது செயலைத்தான் நீ எங்களிடம் தவறாகக் காண்கிறாய். அது பழிக்கப்படும் குற்றமாக இருந்தால் அது நாங்கள் செய்த குற்றம்தான். பின்னர் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்தார்கள்: இறைவா “எங்களை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்துவதற்காக எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக, உன் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக, உன் தூதரைப் பின்பற்றியவர்களாக எங்களை மரணிக்கச் செய்வாயாக.”