அல்-முக்தஸர்
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُۥ لِيُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَآءَهُمْ وَنَسْتَحْىِۦ نِسَآءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَـٰهِرُونَ ﴿١٢٧﴾
பிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பெரியவர்களும் பிர்அவ்னை மூஸாவுக்கும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களுக்கும் எதிராகத் தூண்டியவர்களாகக் கூறினார்கள்: பிர்அவ்னே! மூஸாவையும் அவரது சமூகத்தையும் பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும் உம்மையும் உம்தெய்வங்களையும் விட்டுவிடுவதற்கும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைப்பதற்கும் விட்டுவிடுகிறீரா?” பிர்அவ்ன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம். அவர்களின் பெண்களை பணிவிடை செய்வதற்காக விட்டுவைப்போம். நிச்சயமாக நாம் அடக்குமுறையினாலும் அதிகாரத்தினாலும் அவர்களை மிகைத்தவர்களாவோம்.”