×
الأعرافவசனம் 132

அல்-முக்தஸர்

وَقَالُوا۟ مَهْمَا تَأْتِنَا بِهِۦ مِنْ ءَايَةٍ لِّتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ ﴿١٣٢﴾

பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் சத்தியத்தை விட்டு பிடிவாதமாகக் கூறினார்கள்: “நீர் எங்களிடம் எத்தகைய சான்றுகளையம், ஆதாரங்களையும் கொண்டுவந்தாலும், எங்களிடமுள்ளவற்றை விட்டும் எம்மைத் திருப்புவதற்கு அவை அசத்தியம், நீர் கொண்டுவந்ததே உண்மை என்பதை நிரூபிக்க எத்தகைய ஆதாரங்களை நீர் கொண்டுவந்தாலும் நாங்கள் ஒருபோதும் உம்மை உண்மைப்படுத்த மாட்டோம்.