×
الأعرافவசனம் 133

அல்-முக்தஸர்

فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَـٰتٍ مُّفَصَّلَـٰتٍ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا مُّجْرِمِينَ ﴿١٣٣﴾

அவர்களின் நிராகரிப்பு மற்றும் பிடிவாதத்தின் காரணமாக அவர்கள் மீது பெருமழையைத் தண்டனையாக அனுப்பினோம். அது அவர்களின் வயல்களையும் விளைச்சல்களையும் மூழ்கடித்தது. அவர்களின் மீது வெட்டுக்கிளிகளை அனுப்பினோம். அவை அவர்களின் விளைச்சல்களை தின்றுவிட்டன. அவர்களது பயிர்களைத் தாக்கும் அல்லது அவர்களது முடியில் தொந்தரவு கொடுக்கும் பேன்களை அனுப்பினோம். இன்னும் தவளைகளையும் அவர்களின் மீது அனுப்பினோம். அவை அவர்களின் பாத்திரங்களில் நிரம்பி, உணவுப் பொருள்களை நாசமாக்கி விட்டன. தூக்கத்தைக் கெடுத்துவிட்டன. அவர்களின் மீது இரத்தத்தை அனுப்பி கிணறுகளையும் ஆறுகளையும் இரத்தமாக மாற்றினோம். அனைத்தையும் தனித் தனியான தெளிவான சான்றுகளாக,ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பினோம். இத்தனை தண்டனைகளைக் கண்ட பின்னரும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மூஸா கொண்டுவந்ததை உண்மைப்படுத்தாமல் கர்வம் கொண்டார்கள். பாவங்கள் புரியும், அசத்தியத்தை விட்டும் விலகாத, நேர்வழிபெறாத மக்களாக அவர்கள் இருந்தார்கள்.