×
الأعرافவசனம் 145

அல்-முக்தஸர்

وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا ۚ سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَـٰسِقِينَ ﴿١٤٥﴾

இஸ்ராயீலின் மக்களுக்குத் தேவையான உலக மற்றும் மார்க்க விஷயங்கள் அனைத்தையும் மூசாவுக்கு மரம் அல்லது வேறொன்றிலான ஏடுகளில் நாம் எழுதி வழங்கினோம். அவர்களில் அறிவுரைபெற விரும்புபவர் அறிவுரை பெரும் பொருட்டும் அவர்களுக்கு விளக்கம் தேவையான சட்டங்களுக்கு விளக்கமாக அமையும் பொருட்டும் அதனை வழங்கினோம். -மூசாவே!- இந்த தௌராத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக. கட்டளையிடப்பட்டுள்ள விஷயங்களை முழுமையான விதத்தில் நடைமுறைப்படுத்தல், பொறுமை, மன்னிப்பு போன்ற தவ்ராத்திலுள்ள அதிக கூலியைப் பெற்றுத் தரும் நல்லவற்றை பற்றிக் கொள்ளுமாறு உம்முடைய சமூகமான இஸ்ராயீலின் மக்களுக்கு ஏவுவீராக. எனக்கு அடிபணியாமல் என் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களுக்கு நேர்ந்த கதியையும் அவர்களுக்கு நிகழும் அழிவையும் விரைவில் நான் உங்களுக்குக் காட்டுவேன்.