×
الأعرافவசனம் 146

அல்-முக்தஸர்

سَأَصْرِفُ عَنْ ءَايَـٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلْغَىِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَـٰفِلِينَ ﴿١٤٦﴾

அல்லாஹ்வின் அடியார்களுக்கு எதிராகவும் சத்தியத்திற்கு எதிராகவும் அநியாயமாக கர்வம் கொள்பவர்களை பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளும் இருக்கும் என் சான்றுகளிலிருந்து படிப்பினை பெறுவதிலிருந்தும் என் வேத வசனங்களைப் புரிந்து கொள்வதிலிருந்தும் நான் திருப்பிவிடுவேன். சான்றுகள் அனைத்தையும் கண்டுவிட்டாலும் அவற்றைப் மறுப்பதனாலும் புறக்கணிப்பதனாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பதாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் சத்தியப் பாதையை அவர்கள் கண்டால் அதில் செல்லவோ செல்வதற்கு ஆர்வம் கொள்ளவோ மாட்டார்கள். அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் வழிகேட்டின் பாதையைக் கண்டால் அதில் அவர்கள் செல்கிறார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை உண்மையெனக்காட்டும் மகத்தான அல்லாஹ்வின் சான்றுகளை அவர்கள் மறுத்ததனாலும் அவற்றைக் குறித்து அலட்சியமாக இருந்ததனாலும் அவர்களுக்கு இந்நிலமை ஏற்பட்டது.