அல்-முக்தஸர்
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٤٧﴾
நம்முடைய தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய நம் சான்றுகளையும் மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்திப்பையும் மறுத்தவர்களின் நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. அவை ஏற்கப்படுவதற்கான நிபந்தனையை இழந்ததனால் அவர்களுக்கு எந்தக் கூலியும் வழங்கப்படாது. அவர்கள் செய்துவந்த நிராகரிப்பான இணைவைப்பான செயல்களுக்கே மறுமை நாளில் கூலி வழங்கப்படுவார்கள். அதற்கான கூலி நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பதாகும்.