×
الأعرافவசனம் 148

அல்-முக்தஸர்

وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَـٰلِمِينَ ﴿١٤٨﴾

மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற பிறகு அவரது சமூகத்தார் தங்கள் ஆபரணங்களால் உயிரற்ற, சப்தமிடும் ஒரு காளைக் கன்று உருவமொன்றை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த காளைக் கன்று அவர்களிடம் பேசவில்லை, பௌதீக, மானசீக எந்த நல்வழியையும் அவர்களுக்கு அது காட்டவில்லை, அவர்களுக்குப் பலனளிக்கவோ அவர்களை விட்டு தீங்கினை அகற்றவோ செய்யவில்லை என்பதை அவர்கள் அறியவில்லையா? அதனை வணங்கப்படும் தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தார்கள்.